கோவையிலும் டைடல் பார்க்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட "டைடல் பார்க்"கைத் தொடர்ந்து, கோவையிலும் 27ஏக்கர் நிலப்பரப்பில் டைடல் பார்க் ஒன்றை அமைக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல சேர்மன் மகாலிங்கம் மற்றும் மாநில கவுன்சில்சேர்மன் அனந்த நாராயணன், கோவை பிராந்திய சேர்மன் மகேந்திர ராமதாஸ் ஆகியோர் கூறியதாவது:

கோவை அவிநாசி சாலையில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிஅருகே 27 ஏக்கர் நிலப்பரப்பில் தரிசு நிலம்உள்ளது. இங்கு டைடல் பார்க் அமைக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் விதி முறைகளுக்குஉட்பட்டு விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை ஒருக்கிணைத்து புதிய போக்குவரத்து பாதைஅமைக்க வேண்டும் என்று கோரியும் அரசிடம் மனு கொடுத்து உள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு மைல் என்றமுடிவுப்படி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டாலே, அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்தப் பணி முடிவடைந்துவிடும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் உள் கட்டமைப்பு வளர்ச்சிஎன்பது கம்ப்யூட்டர் மூலம் புது ஒருங்கிணைப்புஏற்படுத்துதலையே குறிக்கும்.

சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் கனெக்ட்- 2001 என்ற சர்வதேச தொழில் நுட்ப வளர்ச்சிகுறித்த கருத்தரங்கு நடக்கிறது. இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, உயர் தகவலியல் பற்றி விரிவாகவிளக்கப்பட உள்ளது என்று அவர்கள் கூறினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற