டான்சி வழக்கு: 7ம் தேதி ஜெ. அப்பீல் மனு மீது விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்ஜெணலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுமீதான வழக்கு வரும் 7ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 27ம் தேதி ஆரம்பமானது.
3 நாட்களாக நடந்துகொண்டிருந்த இந்த விசாரணையை நிறுத்தக் கோரி அரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
இந்த அப்பீல் வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களையும் தனக்கு வழங்கவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத்திலேயே இந்தவழக்கு நடப்பது, மக்கள் மத்தியில் நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்பும்.
எனவே, இந்த அப்பீல் வழக்கை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேன்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சிவழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நறுத்த வேண்டும் என்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் நேற்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஒருஅப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் வக்கீல் வேணுகோபால் தாக்கல் செய்துள்ள இந்த அப்பீல்மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு வக்கீல் வெங்கடபதி, சமீபத்தில் டிவிக்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் பேட்டியளிக்கும் போது, டான்சிஅப்பீல் மனுக்கள் வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போதுமானதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தப்பட்டதற்கு எந்த உட்காரணங்களும் இல்லை. பிறகு ஏன் இந்தவழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும்?.
மேலும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று, வரும் நவம்பர் 13ம் தேதியோடு 6 மாதங்கள் முடிகிறது. அதற்குள்அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வேண்டும். ஆனால் இவ்வாறு வழக்கு விசாரணைதடைசெய்யப்பட்டிருப்பதால், அவர் முதல்வராக நீடிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, இந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு விதிக்கப்ட்டுள்ள இடைக்காலத் தடையை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்குஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரூச்சா மற்றும் சபர்வால் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், இதன் மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications