ஜெ. முதல்வராகத் தொடர்வார் - அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், ஜெயலலிதாவே முதல்வராகத் தொடர்வார் என்றும் இடைக்கால முதல்வர் என்றபேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக எம்.பியான மலைச்சாமி கூறியுள்ளார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றி அவரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு சகஜம்தான். இந்தத் தீர்ப்பு எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தரவில்லை.இருந்தாலும், ஜெயலலிதா இதற்காகச் சோர்ந்துவிடப் போவதில்லை.

இடைக்கால முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் முழுமையாக 2 மாதங்கள் உள்ளன. அதற்குள்எல்லாவற்றையும் சமாளித்து, ஜெயலலிதா முதல்வராகவே தொடர்ந்து நீடிப்பார்.

ஒரு மாத கால அவகாசமே எங்களுக்குப் போதும். ஜெயலலிதாவை அதற்குள் எம்.எல்.ஏ. ஆக்கிவிட முடியும்.முதல்வர் பதவியை விட்டு ஜெயலலிதா விலகாமலேயே, அவரை நிச்சயம் மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்கிக்காட்டுவோம்.

கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார்; சட்டம் எங்கள் பக்கம் இருக்கிறது; இவ்வளவு ஏன், சட்டசபைத் தேர்தலில்அருமையான தீர்ப்பு வழங்கிய மக்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, கோர்ட் மட்டும்எங்கள் பக்கம் இல்லாமல் போய்விட்டது என்றார் மலைச்சாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+