வெளிநாடு சென்று துன்புறும் தமிழர்களைக் காப்பாற்ற ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வேலைக்காக சென்று, அங்கு சித்திரவதைக்குள்ளாகும் தமிழர்களைக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.
தங்கள் விவசாய நிலங்களை விற்றும், கடன் வாங்கியும் இதுபோன்ற வேலைகளுக்கு ஏற்பாடு செய்து தரும்ஏஜென்டுகளிடம் ரூ. 1 லட்சம், 2 லட்சம் எனக் கொடுத்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குதமிழ்நாட்டிலிருந்து சிலர் வேலைக்குச் செல்கிறார்கள்.
அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற கனவோடுதான் அவர்கள் அங்கு போகிறார்கள். ஆனால் அங்கு போனவுடன்தான்தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குத் தெரிய வருகிறது.
தற்போது மலேசியாவில் 5,000 தமிழர்களும், சிங்கப்பூரில் 3,000 தமிழர்களும் இப்படி ஏமாற்றப்பட்டு அங்குள்ளபோலீஸாரால் பிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். மலேசிய சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள சுமார் 2,000 தமிழர்களுக்கு மன நோய் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் அங்கு கொத்தடிமை போல நடத்தப்படுகின்றனர்.எட்டு மணி நேர வேலை, 1,000 வெள்ளி சம்பளம் என்று பேசி அழைத்துச் செல்லப்படும் அவர்கள் அதன்படிவேலை வாங்கப்படுவதில்லை.
500 வெள்ளி வரைதான் அவர்களுக்கு அதிகபட்சம் சம்பளம் தரப்படுகிறது. தினசரி குறைந்தது 15 மணி நேரம்வரை அவர்கள் கட்டாயமாக வேலை பார்க்க வேண்டும்.
இதுபோன்று தவிக்கும் தமிழர்களையும், சிறையில் வாடும் தமிழர்களையும், தமிழ்ப் பெண்களையும் உடனடியாகவிடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, இதுபோன்ற மோசடி ஏஜென்சிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ராமதாஸ்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications