காவிரி பிரச்சனை: பிரதமரை நாளை சந்திக்கிறது அனைத்துக் கட்சி குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில்நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிரதமரைவற்புறுத்த அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்ட காரணத்தாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரைதிறந்துவிடாத காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ளகுறுவை பயிர் சாகுபடிக்கு நீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து காவிரி நதி நீர் ஆணைய கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமரைவற்புறுத்தினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை மத்திய நீர்வளத்துறைசெயலாளர் தலைமையில் காவிரி நதி நீர் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.

ஆனால் கர்நாடகத்திலும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது என்றுகர்நாடகம் கூறிவிட்டது.

இதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நேற்று சென்னையில் அனைத்து கட்சி கூட்டம்கூடியது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்த பின்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செய்தியாளர்களிடம் ஜெயலலிதா படித்துக் காட்டினார்.

"கல்வி அமைச்சர் தம்பி துரை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் தலைமையில்தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், காவிரி டெல்டா விவசாய சங்கபிரதிநிதிகளும் வரும் 10ம் தேதி (திங்கள்கிழமை) பிரதமர் வாஜ்பாயை சந்திக்கவுள்ளனர்.

அப்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் தமிழகத்தில பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிரைகாப்பாற்றவும், குறுவை பயிர் நடவுக்குத் தேவையான நீரை கர்நடாகம் திறந்துவிட வேண்டியதன் அவசியத்தைஅவர்கள் எடுத்துக் கூறுவார்கள்" என்றார் ஜெயலலிதா.

அதன் பின் அவர் கூறுகையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தை கூட்டுவதால்எந்த பயனும் ஏற்படாது.

கர்நாடக அணைகளில் 97 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அவர்கள் தேவை 58 டி.எம்.சி. மட்டுமே. மீதமிருக்கும் 39டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தாராளமாகத் தரலாம். தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி தண்ணீர்திறந்துவிட்டால் கூட பயிர்களை காப்பாற்றிவிடலாம் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+