For Daily Alerts
திமுக கூட்டணிக்கு பாமக வரும்: கருணாநிதி
சென்னை:
திமுக கூட்டணிக்கு பாமக விரைவில் வந்து சேரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சட்டமன்ற தேர்தலின் போது இருந்த அதே கூட்டணிதான் நீடிக்குமா என்றுஇப்போது கூற முடியாது. சில மாற்றங்கள் ஏற்படலாம்.
திமுக கூட்டணியில் பாமக இணையும் வாய்ப்பு உள்ளது. வேறு புதிய கட்சிகள் வருமா என்று இப்போது கூறமுடியாது.
கடந்த முறையை விட இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடுவதா என்பது பற்றி தோழமை கட்சிகளுடன் பேசிமுடிவெடுப்போம்.
சென்னை மேயராக மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவரா என்பது குறித்து கழகம் ஆலோசித்து முடிவெடுக்கும்என்று கூறினார் கருணாநிதி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!