சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
அமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து சென்னையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய போலீஸார் தூதரகத்திற்கு எதிரேயுள்ள அண்ணா மேம்பாலத்தில் பாதுகாப்பு கவசம்பொருத்தப்பட்ட வாகனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க தூதரகம் புதன்கிழமைமூடப்பட்டுள்ளது.
இதுதவிர, கலவரக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்தப்படும் நீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமான வஜ்ராவும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் தவிர சென்னையின் முக்கிய இடங்களான எல்.ஐ.சி. கட்டடம், எழும்பூர் ரயில் நிலையம்,பாரிமுனை பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் பல்வேறு அரசுக் கட்டிடங்களுக்கும் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் துப்பாக்கிகளுடன் ரோந்து சுற்றிவருகின்றனர். கோவில்கள், மசூதிகள் ஆகியவற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தரும் பாதுகாப்பை விடகூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் தவிர கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications