அப்பீல் மனுக்களை விரைந்து விசாரிக்கக் கோரிய ஜெ. மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டான்சி நில வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை ரத்துசெய்யக்கோரி, தான் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை 5 நாட்களுக்குள் விசாரணைக்குஎடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர்ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டான்சி நில ஊழல் வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்குகளில்ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா தாக்கல்செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அரசுவழக்கறிஞர் வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நிறுத்திவைக்குமாறு இடைக்கால தடை விதித்து கடந்த 7ம் தேதி தீர்ப்பளித்தது.

அதன் பின் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையை தற்போது விசாரித்து வரும் நீதிபதிக்கு பதிலாகவேறு ஒருவர் விசாரிப்பார் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்குகள் அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாகவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தனது அப்பீல் மனு மீதான விசாரணையை 5 நாட்களுக்குள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பரூச்சா, நீதிபதி பிரிஜேஷ் குமார், நீதிபதி அசோக் பான் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

இதே போன்ற மனு முன்னரே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள்ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+