அமெரிக்காவுக்கு உதவி: முடிவெடுக்க அவகாசம் கேட்கிறது பாக்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உதவுவது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் எனபாகிஸ்தான் கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு உதவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என பாகிஸ்தானை தீவிரவாத அமைப்புகள் மிரட்டியுள்ளதால்இப்போது பாகிஸ்தான் அரசு பின் வாங்கி வருவதாகத் தெரிகிறது. இந்தத் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியதும்அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து வளர்த்ததும் பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தத்து.
இப்போது இந்த அமைப்புகளே பாகிஸ்தானை மிரட்ட ஆரம்பித்துள்ளன.
பர்வேஸ் முஷாரபுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுப்பிய கடிதத்தில், உடனடியாக தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவிவழங்குவதை பாகிஸ்தான் நிறுத்தியாக வேண்டும் என்று எச்சரித்திருந்தார். மேலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையைஉடனே மூடுமாறும் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்ப உடனே ஆப்கன் எல்லையில் படைகளை குவித்தது பாகிஸ்தான். தனது உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்கு எல்லா வகையிலும் உதவுவோம்என்று அறிவித்தார்.
இந் நிலையில் ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தானின் மீது தான் அமெரிக்க விமானங்கள் பறக்கும் என்று அமெரிக்க அரசுகூறியது. இதை பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர் பாதுகாப்புத்துறை ஜெனரல் ஒருவர் மூலம் பாகிஸ்தானுக்குகடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அமெரிக்கபோர் விமானங்கள் பாகிஸ்தான் மீது பறக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என பாகிஸ்தான்கூறியுள்ளது. இப்போது வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல்மெஹ்மூத் அகமத் கால அவகாசம் கேட்டு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அனுமதி தராவிட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும், அனுமதி தந்தால் உள்நாட்டில் உள்ள தீவிரவாதஅமைப்புகளிடம் இருந்து பிரச்சனை வரும் என்பதால் குழம்பிப் போய் உள்ளது பாகிஸ்தான்.
எப்படியாவது தீவிரவாத அமைப்புகளை சமாதானம் செய்து அமெரிக்காவுக்கு அனுமதி தரப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications