மழை காரணமாக மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

கடந்த இரண்டு நாட்களாக காவிரி தமிழகத்தில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையை மூடும் நிலைதற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பருவமழை பொய்த்து விட்ட காரணத்தாலும், கர்நாடக திறந்து விட வேண்டிய நீரை திறந்துவிடாத காரணத்தாலும்பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் நிலவி வந்தது.

மத்திய அரசு கூட்டிய காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கர்நாடகத்தில் வறட்சி நிலவி வருவதால் தமிழகத்திற்குதண்ணீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடக அரசு கூறியது.

இதையடுத்து தமிழகத்திலிருந்து அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்தை வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், பிரதமரை சந்தித்த கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, "தமிழகம் கேட்டுக் கொண்டபடி காவிரிநீரை திறந்து விட முடியாத நிலையில் கர்நாடகம் உள்ளது. கர்நாடக அணைகளில் நீரின் இருப்பு குறைவாகஉள்ளது. கர்நாடகத்திலும் வறட்சி நிலவுகிறது" என்று கூறினார்.

மேட்டூரிலும் நீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் மழை பெய்ததால், மேட்டூருக்கு வரும் நீரின் அளவுஅதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையை மூடும் நிலை தற்காலிகமாக தள்ளி போடப்பட்டுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.11 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதேசமயம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 78.3 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேட்டூர் அணைக்கு 9,646 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 5,220 கன அடி நீர்திறந்து விடப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற