பால்கனி இடிந்து மளிகைக் கடைக்காரர் சாவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் வீட்டு பால்கனி இடிந்து விழுந்து மளிகைக் கடைக்காரர் பலியானார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கன மழை பெய்தது. இதில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேலுஎன்பவரது வீடு நன்றாக நனைந்து விட்டது. அவரது வீட்டு பால்கனி ஏற்கனவே பலம் இழந்த நிலையில் இருந்தது.மழைகாரணமாக அது மிகவும் ஆபத்தான நிலையில்இருந்தது.

இந் நிலையில் காலையில் எழுந்த வஜ்ரவேலு, வீட்டுக்கு வெளியே நின்று பல் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது பால்கனிஇடிந்து விழுந்தது. இதில் வஜ்ரவேலு தலை நசுங்கி அங்கேயே இறந்தார்.

வஜ்ரவேலு மளிகைக்கடை நடத்தி வந்தார். கடைக்குச் சென்றிருந்த வஜ்ரவேலுவின் மனைவி அனுசூயா வீடு திரும்பியபோதுபால்கனி இடிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.

இடிபாடுகளுக்குள் கணவர் நசுங்கிக் கிடந்ததை பார்த்ததும் அவர் அலறியடித்து அக்கம் பக்கத்தில் இருந்தோரைக் கூப்பிட்டார்.ஆனால் இடிபாடுகளை அகற்றி வஜ்ரவேலுவை மீட்டபோது அவர் உயிருடன் இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற