காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு போயே தீருவோம் - தமிழக அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நதி நீர் ஆணையத்தை வரும் 22ம் தேதி மத்திய அரசு கூட்டினாலும்காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்வது என்ற தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசுகூறியுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய நீரைதிறந்துவிடாத காரணத்தாலும் தமிழகத்தில் குறுவை பயிர்களின் சாகுபடிக்குதேவையான அளவு நீர் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி டெல்லியில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழுகூட்டத்தில் கர்நாடகாவிலும் வறட்சி நிலவி வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர்திறந்துவிடமுடியாது என்று கர்நாடக அரசு கூறியது.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து காவிரியில்கர்நாடக அரசு நீர் திறந்துவிட அவர்களை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில்கர்நாடகம். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் பிரதிவாதியாக சேர்ப்பதுஎன்றும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்ஜெயலலிதா கூறுகையில்,

காவிரி பிரச்சனை தொடர்பாக கடந்த 14ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம்எழுதினேன். ஆனால் இது வரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை.

எனவே வேறு வழியில்லாததால் காவிரி பிரச்சனை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தைஅணுகுவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.

இந்நிலையில் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக வரும் 22ம் தேதி காவிரி நதிநீர்ஆணையக் கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்ற தமிழக அரசின் முடிவில் எந்தமாற்றமும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் மிகவும் குறைந்து பயிர்கள் வாடும் நிலையில்ஆணையத்தை கூட்டுவது எந்த வித பயனையும் தராது என்று அரசு கருதுகிறது என்றுகூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற