கோயம்புத்தூர் வந்த தனுஷுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த ரசிகர்கள்! ஆனாலும் கொஞ்சம் கவனம் தேவை!
சென்னை: நடிகர் தனுஷ் "கர" படத்தின் ப்ரோமோசனுக்காக கோயம்புத்தூர் வந்த நிலையில் அங்கு அவரது ரசிகர்கள் வேல் பரிசு கொடுத்து தனுஷினை திக்கு முக்காட வைத்திருக்கின்றனர். அதோடு விமான நிலையத்தில் தனுஷ் ரசிகர்கள் போட்ட கூச்சல் குழப்பம் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.

தொடரும் ரசிகர்களின் செயல்
ஏற்கனவே சில மாதங்களாக நடிகர் விஜய்க்கு பின்னாடி ரசிகர்கள் அலைமோத வலம் வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி கோவையில் நடைபெற உள்ள நிலையில், அவர் அங்கு சென்றபோது ரசிகர்கள் அளித்த வரவேற்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷுக்கு வரவேற்பு
விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை, பெரும் திரளான ரசிகர்கள் கூடி உற்சாகமாக வரவேற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நகரில் நடைபெற்றது. தற்போது கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி, படத்திற்கு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
கர படத்தின் எதிர்பார்ப்பு
இந்நிலையில், தனுஷ் கடந்த ஆண்டு நடித்த படங்கள் பெரிய வசூலை பெற்றிருந்தாலும், அவற்றில் பெரும்பாலும் பிற மொழிப் படங்களே முன்னிலை பெற்றதாக கூறப்படுகிறது. தமிழில் அவர் இயக்கிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை என்ற பின்னணியில், கர திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியைத் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில், ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு குறித்து கலவையான கருத்துகளும் எழுந்துள்ளன. கோவையில் தனுஷுக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு ஒருபுறம் பாராட்டைப் பெற்றாலும், மறுபுறம் விமான நிலையம் போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ரசிகர்கள் கவனம் தேவை
ரசிகர்கள் நடிகர்களை பார்க்கும் ஆர்வத்தில், வேலுடன், மலர்களுடன், பெரிய கூட்டமாக வந்து குவிவது வழக்கமாகி வருகிறது. ஆனால் இது சில நேரங்களில் "அன்பு தொல்லை" ஆக மாறிவிடுகிறது என்ற விமர்சனமும் வருகிறது. "அன்பு என்பது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதபோது மட்டுமே அதன் மதிப்பு இருக்கும்; இல்லையெனில் அது தொந்தரவு ஆகிவிடும்" என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
"விஜய் ஜெயிச்சிட்டாரு... அடுத்து?" - தனுஷை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! கஸ்தூரி ராஜா பேச்சால் கிளம்பிய சர்ச்சை -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications