பின்லேடனை ஒப்படைக்க மாட்டோம்: மத குருக்கள் கூட்டத்தில் தலிபான்கள் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என மத குருமார்களின் (உலமாக்கள) கூட்டத்தில்ஆப்கானிஸ்தான் ஆட்சியாளரும் தலிபான் அமைப்பின் தலைவருமான முல்லா ஒமர் கூறியுள்ளார்.

இன்று காபூலில் தொடங்கிய மத குருமார்கள் கூட்டத்தில் முல்லா ஒமர் கலந்து கொள்ளவில்லை. அவருடைய செய்திதான் வாசிக்கப்பட்டது. அதில், அமெரிக்கா மீது நடந்த தாக்குதலில் பின்லேடனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இப்படிப்பட்ட மாபெரும் தாக்குதல் நடத்தும் வலிமையும் பண பலமும் பின் லேடனின் கூட்டாளிகளுக்கு இல்லை.அவரை வேண்டுமென்றே பலிகடாவாக்க அமெரிக்கா முயல்கிறது.

லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அவரது செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி வாசிக்கப்பட்ட பிறகு உலமாக்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

அமெரிக்கா எந்த நேரமும் தாக்கும் என்பதால் முல்லா ஒமர் தலிபான்களால் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.காண்டஹாரில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

காண்டஹாரில் இருந்து காபூல் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் தனது ரகசிய இடத்துக்குத்திரும்புவதை அமெரிக்காவின் ரகசிய ஏஜெண்டுகளும், அமெரிக்க செயற்கைக் கோள்களும் படம் பிடித்துவிடும்என்பதாலும் அவரது ரகசிய இடத்தையும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதாலும் தான் முல்லா ஒமர் இக்கூட்டத்துக்கே வரவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற