ஆபரேஷன் நடந்தவுடன் மாணவர் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே திருத்தணியில் காது வலிக்காக ஆபரேஷன் செய்யப்பட்ட மாணவர்சிகிச்சைக்குப் பிறகு இறந்தார்.

திருத்தணியிலுள்ள வேலஞ்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கோபி. 22 வயதாகும் இவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு சிலநாட்களாக காதில் வலி இருந்து வந்தது. இதையடுத்து சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் ஆபரேஷன் நடந்த சில மணிநேரத்திலேயே கோபி இறந்து விட்டார். இதையடுத்து மோகன், தனது மகனைவேலஞ்சேரிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தார். பிறகு பூக்கடை போலீஸ்நிலையத்தில், தனது மகனுக்கு தவறாக ஆபரேஷன் நடந்து விட்டதால் அவர்இறந்ததாக புகார் கொடுத்தார்.

இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற