ஜெ. முதல்வரானது அரசியல் சட்டத்துக்கு எதிரானது: தீர்ப்பு விவரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கிரிமினல் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதே தவறு என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்கூறியுள்ளது.

டான்சி வழக்கிலும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டதைஎதிர்த்து வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தார்.

அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி ஜெயலலிதாவை முதல்வராக நியமித்ததை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்தார்.அவருடன் மேலும் 5 பேரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல்செய்தனர்.

ஜெயலலிதா பதவியேற்றதை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த 6 மனுக்களும் எதிர்த்தன.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் ஜெயலலிதாவின் பதவியேற்றது செல்லாது எனதீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

கிரிமினல் வழக்கில் சிறை தண்டைன பெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது தவறு. அரசியல் சட்டத்துக்கு முரணானது.இதனால் அவரது பதவியைப் பறிக்க உத்தரவிடுகிறோம். அவர் பதவி ஏற்றதே செல்லாது என தீர்ப்பளிக்கிறோம்.

அரசியல் சட்டத்தின் 164வது பிரிவின் படி எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவர் முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோநியமிக்கப்படலாம். ஆனால், அரசியல் சட்டத்தின் 173வது பிரிவு மற்றும் 191வது பிரிவின் கீழ் அவர் அதற்கு தகுதியானவராகஇருக்க வேண்டும்.

கிரிமினல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவரோ, அந்த வழக்கில் 2 சிறை தண்டனை பெற்றவரோ முதல்வராக நியமிகப்படக்கூடாது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பேசும்போது மக்களின் தீர்ப்புத் தான் உயர்ந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் பதவியேற்றார்என்று கூறினார். அரசியல் சட்டத்துக்கு உகந்ததாக இருந்தால் தான் மக்களின் தீர்ப்பை ஏற்க முடியும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் வேணுகோபால் வாதாடினார். ஜெயலலிதாவுக்கு எதிராக மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி, மூத்த வழக்கறிஞர் நாரிமன் ஆகியோர் வாதாடினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற