முதல்வராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பதவியேற்றுக் கொண்டார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும்ரங்கராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள்ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டதால் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பதவிகளும் செல்லாது எனஉச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே அமைச்சர்கள் அனைவரும் நாளையே மீண்டும் பதவியேற்பார்கள் என்றுதெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற