யுஏஇல் உள்ள தலிபன் தூதரகத்தை மூட 24 மணிநேரம் கெடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபுதாபி:

ஐக்கிய அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆப்கனின் ஆளும் தலிபன் அரசின்தூதரகங்களை 24 மணி நேரத்தில் மூடிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுமாறுஉத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய அரபு நாடுகளின் அரசு செய்தி நிறுவனமான வாம்வெளியிட்டுள்ளது.

தலிபனுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதகாவும், இது இன்று(சனிக்கிழமை) முதலே அமலுக்கு வருவதாகவும் ஐக்கிய அரபு நாடுகள்அறிவித்திருந்தன.

இதன் அடுத்த கட்டமாக தங்கள் நாட்டில் செயல்பட்டுவரும் தலிபனின் தூதரங்களை24 மணிநேரத்தில் மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு ஐக்கிய அரபு நாடுகள்உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அரசின் இந்த உத்தரவு அங்கு பணிபுரியும் ஆப்கனைச் சேர்ந்த பணியாளர்களுக்கும்பொருந்தும் என்று அரசு தெரிவித்திருப்பதாகவும் வாம் செய்தி நிறுவனம்தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற