பதவி பறிப்பு: 3 பேர் தற்கொலை- ஜெ. அறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானதைத் தொடர்ந்து 1 பெண் உட் பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நான் வகித்துவந்த முதல்வர் பதவி ரத்தானதைத் தொடர்ந்து அதிமுகத் தொண்டர்கள் தீக்குளித்தல் போன்ற காரியங்களில்இறங்குவது என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனைபெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதையடுதது ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். இதனால் மதுரையைச் சேர்ந்த சேதுராமன் என்பவர்தீக்குளித்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மேலும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரம்யா என்றமாணவியும் தீக்குளித்து மரணமடைமந்தார். முருகன் என்ற மற்றொரு தொண்டர் விஷம் அருந்தி மரணமடைந்தார்.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எனது பதவி பறிப்பு பற்றிய செய்தி அறிந்தவுடன் கழக உடன்பிறப்புக்கள் தீக்குளித்தல், விஷம் அருந்துததல் போன் காரியங்களில்இறங்கியுள்ளனர். இதுபோன்ற காரியங்களில் கழக உடன்பிறப்புக்கள் இறங்குவது என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.எனவே யாரும் இனி இவ்வாறு செய்யவேண்டாம்.

எனக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. விரைவில் நான் குற்றமற்றவள் என்பதை கோர்ட் மூலம் நிரூபித்து, மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்பேன் என்றார்.

தற்கொலை செய்துகொண்ட சேதுராமன், ரம்யா மற்றும் முருகன் ஆகியோர் குடம்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.50,000உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற