போரில் அமெரிக்கா அணுகுண்டு பயன்படுத்துமா?- பவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் அணுகுண்டுகளைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் ஆனால் அதற்கான உத்தரவாதம்தரமுடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் காலின் பவல் கூறினார்.

அமெரிக்காவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் சர்வதேச தீவிரவாதி பின் லேடனின் பங்கு உறுதியாகி உள்ளது.

இதனால் அவருக்கு அடைக்கலம் கொடுத்து, மறைத்து வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகள் எந்நேரமும்தாக்குதல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு டிவிக்கு காலின் பவல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பின் லேடன் பங்குபெற்றிருக்கிறார் என்பதற்கு போதுமான சாட்சிகள்எங்களிடம் உள்ளது.

மேலும் அமெரிக்கா மீதும், ஒட்டுமொத்த மனித இனத்தின் மீதும் அவர் தலைமையிலான தீடிவிரவாதக் கும்பல் தாக்குதல்நடத்திவருகிறது.

இதுபோன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போராடத் தயாராக உள்ளது. இந்தப் போரில் அணுகுண்டுகளைப்பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

ஆனால் அதற்கான உத்தரவாதம் அளிக்க முடியாது.

லேடன் இன்னம் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பாதுகாப்பில் தான் இருக்கிறார். அவரை நிச்சயம் நாங்கள் பிடித்து தக்கதண்டனை கொடுப்போம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற