பெஞ்ச்சில் 2 நீதிபதிகள் அளித்த தனித்தனித் தீர்ப்புகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயலலிதாவை தமிழக முதல்வராக நியமித்ததற்காக கவர்னரை கேள்விகேட்க முடியாது என்று ஒரு நீதிபதியும், மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்திலேயே குறைபாடகள் உள்ளது என்று ஒரு நீதிபதியும் தீர்ப்புக் கூறியுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம்தீர்ப்புக்கூறியதன் மூலம் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார்.

இதுகுறித்த வழக்கை நீதிபதிகள் பரூச்சா, பட்நாயக், பிரிஜேஷ் குமார், ரூமாபால் மற்றும் சபர்வால் ஆகிய 5 நீதிபகள் அடங்கியபெஞ்ச் விசாரித்தது.

இவர்களில் 2 நீதிபதிகள் தாங்கள் கூறிய தனித்தனி தீர்ப்புகளில் கூறியிருப்பதாவது,

நீதிபதி பிரிஜேஷ் குமார்:

இந்த வழக்கில் ஜெயலலிதாவை தல்வராக நியமித்துள்ளார் கவர்னர். அவர் தனது கடமையைத் தா"ன் செய்துள்ளார். எனவே அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்திய அரசியல் சட்டம் 361 வது பிரிவின்படி, ஒருவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தது குறித்து கவர்னரிடம் கேள்விகேட்கமுடியாது.

ஆனால் மக்கள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல என்று கூறினார்.

நீதிபதி பட்நாயக்:

பிரதிநிதித்துவச் சட்டம் 8(3) வது பிரிவின் படி ,

ஊழல் செய்ததற்காக ஒருவர் ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றிருந்தாலும், எம்.எல்.ஏவாகவோ,எம்.பியாகவோ இருந்து 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றிருந்தாலும் அவர் அமைச்சராவதில் எந்தபிரச்சனையும் இல்லை.

ஊழல் குற்றம் செய்தவர்களை தகுதி இழப்பு செய்வது குறித்த, இந்தச் சட்டப்பிரிவு குறித்து பாராளுமன்றத்தில்விவாதித்து, ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டிய தருணம் என்றார் அவர்.

இந்த 2 நீதிபதிகளும் மற்ற 3 நீதிபதிகள் கூறியுள்ள தீர்ப்புக்கு சற்று மாறான கருத்துக்களைக் கூறியிருந்தாலும்,பெரும்பாலான நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.

பிறகு ஒருமனதாக ஒட்டுமொத்த நீதிபதிகளின் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற