குமரியில் கடலுக்குள் சென்ற மீனவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் வீசியசூறாவளியில் சிக்கி பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

இதனால் அந்த மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை,பெருஞ்சாணி ஆகிய அணைகளில் அபாய கட்டத்தைத் தாண்டி நீர் மட்டம்உயர்ந்துள்ளதால் அணைகள் மூடப்பட்டு விட்டன.

இதற்கிடையே, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்னும் கரைசேரவில்லை என்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாலும், சூறாவளிக் காற்று வீசுவதாலும் அவர்இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற