இந்தியாவில் உயரமான கட்டடங்கள் மேல் விமானங்கள் பறக்க தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மேல் இனி விமானங்கள் பறக்க கூடாதுவிமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

சரித்துர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் வழியாக செல்லும் விமானத்தின் பாதையில் மாற்றங்கள் செய்யுமாறுஅதிகாரிகளை விமானத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சையத் ஷாநாவாஸ் ஹுசைன் செய்தியாளர்களிடம்கூறுகையில்,

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், முக்கிய கட்டிடங்கள் மேல் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முன்னெச்செரிக்ககை நடவடிக்கையாகும்.

விமானங்கள் செல்லும் பாதையில் அதிகமான மாற்றங்கள் இருக்காது. முக்கியமான கட்டிடங்கள் அருகேவிமானங்கள் செல்லாத வகையில்தான் விமான பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவத்திலிருந்து நாம் பாடம்கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம், செங்கோட்டை. தாஜ்மஹால், குதுப்மினார், ஆக்ரா கோட்டை,சென்னை. மும்பை, கோல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தகட்டிடங்கள், மத்திய அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்டவை மேல் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற