பாகிஸ்தான் எல்லையருகே பின் லேடன் பதுங்கல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் ஆப்கனில் உள்ள பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஜலாலாபாத்தில்பதுங்கியிருப்பதாக ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று அமெரிக்கா உறுதிபட கூறியுள்ளது.

ஆனால், பின் லேடனை ஒப்படைக்க தலிபான் அரசு மறுத்துவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் ஆப்கனைத்தாக்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.

பின் லேடன் ஆப்கனை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் எங்கிருக்கிறார் என்று தங்களுக்குத்தெரியவில்லை என்றும் தலிபன் அறிவித்தது. ஆனால் இதை நம்புவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை.

இந்நிலையில், பின் லேடன் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ஆப்கன் நகரமான ஜலாலாபாத் பகுதியில்பதுங்கியிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் இடார்-டாஸ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், இங்கிருந்தவாறே தலிபன் படைகளுக்கு தலைமையேற்று பதில்தாக்குதலை பின் லேடன் நடத்தக்கூடும் என்றும் அந்நிறுவனம் கூறியது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கான தலிபன் தூதர் அப்துல் சலாம் ஜயீப் கூறுகையில், "ஓசமா பின் லேடன்எங்கிருக்கிறார் என்று இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற