அதிமுக போராட்டம் தொடர்கிறது .. அமைச்சர் உண்ணாவிரதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர்திங்கள்கிழமையும் போராட்டம் நடத்தினர்.

ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்புஅளித்ததைக் கண்டித்தும், இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று கூறியும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பலபகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ஈரோடு அருகே ரயில் மறியல் நடந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமையும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. சென்னையில் இரண்டு இடங்களில்அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ஒரு போராட்டத்தில் மாநில அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார்ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகேயும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் எழுந்தது. போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில்கலந்து கொண்டவர்கள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர்.

கன்னியாகுமரியில் மாநில அமைச்சர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டனர்.

நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில் பஸ் நிலையம் அருகேபோராட்டம் நடத்தப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற