அரேபியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்: தலிபான்கள் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

அரேபியப் பகுதியில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறினால் தான் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்என ஆப்கானிஸ்தான் ஆட்சியாளரும் தலிபான் திவிரவாதப் படையின் தலைவருமான முல்லா முகம்மத் ஒமர் கூறியுள்ளார்.

ஆப்கான் இஸ்லாமிக் பிரஸ் செய்தி நிறுவனத்தின் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்னைக் கொல்வதாலோ அல்லது ஒசாமா பின் லேடனைக் கொல்வதாலோ அமெரிக்காவுக்கு விடிவு ஏற்பட்டுவிடாது. அதைஅமெரிக்கா நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா விரும்பினால் முதலில் வளைகுடா பகுதியில் உள்ள தனது படையினரை திரும்பப் பெறவேண்டும். பாலஸ்தீன விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தலிபான் அரசை ஆட்சியில் இருந்து நீக்கவும் இஸ்லாமிய மதத்தையே தனது பணயக் கைதியாக்கவும் தான் ஆப்கானிஸ்தான் மீதுஅமெரிக்கா தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. ஏற்கனவே இஸ்லாமிய மதத்தை அமெரிக்கா கைதியாகத் தான்வைத்துள்ளது. எனவே முதலில் எங்கள் மதத்தை விடுவிக்க வேண்டும். இஸ்லாமிய விவகாரங்களில் இனியும் தலையிடுவதைநிறுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசைக் கவிழ்க்கவும் இங்கு அமெரிக்க ஆதரவு அமைத்து சட்டம்-ஒழுங்கு இல்லாதநிலையை உருவாக்கவும் அந் நாடு முயல்கிறது.

இவ்வாறு முல்லா ஒமர் கூறியுள்ளார்.

பின் லேடன் ஆப்கானிஸ்தானை விட்டு எங்கோ சென்றுவிட்டதாக ஏற்கனவே தலிபான்கள் கூறியுள்ளனர். ஆனால், இதைஅமெரிக்கா உள்பட எந்த நாடும் நம்பவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற