வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பு: அத்வானி, கவர்னரிடம் பா.ஜ.க. புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் கொடும்பாவியை அதிமுக அமைச்சர்கள் முன்னிலையில் தொண்டர்கள் எரித்துவருவது குறித்துதமிழக கவர்னர் (பொறுப்பு) ரங்கராஜனுக்கு தமிழக பா.ஜ.கவினர் பேக்ஸ் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் இல.கணேசள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்களின் உருவபொம்மைகளை அமைச்சர்களின்முன்னிலையிலேயே அதிமுகவினர் எரித்துவருகின்றனர். ஆனால் போலீசார் அதைத்தடுக்காமல் வேடிக்கைபார்த்துவருகின்றனர்.

தமிழக அரசே உடந்தையாக இருப்பதால் இதுகுறித்து கவர்னருக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கும்பேக்ஸ் மூலம் தெரிவித்துள்ளோம்.

விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற