தலிபனிடமிருந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றியதாக நார்த்தர்ன் படைகள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

தலிபானிகளிடமிருந்து பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக நார்த்தர்ன்அலையன்ஸ் (தலிபான் எதிர்ப்புப் படை) அறிவித்துள்ளது.

தலிபான் படைகளுக்கும், நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளுக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருகிறது. வடமேற்கு பகுதியில் தக்கார் பகுதியின் தலைநகரானதாலக்கான் பகுதியில் 6 முக்கிய பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக நார்த்தர்ன் கூட்டணிபடையினர் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் படைகளுக்கும் அவர்களை எதிர்ப்பு அணியானநார்த்தர்ன் அலையன்சுக்கும் இடையே கடந்த 1 வார காலமாக கடும் சண்டை நடந்துவருகிறது.

ஓசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்ததால் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீதுபோர் தொடுக்க இருக்கும் இந்நிலையில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தாக்குதல்நடத்துவது தலிபனுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் ஹஜார் பாக் மற்றும் ஜியாராட் மாவட்டங்களைகுறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்று நார்த்தர்ன் அலையன்ஸ் ராணுவகமாண்டர் முகம்மத் ஃபாகிமின் சார்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹபீல்கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், செவ்வாய்க்கிழமை இரவு நாங்கள் நடத்திய தாக்குதலில் 6முக்கிய பகுதிகளை கைப்பற்றினோம். தலிபன் படைகளின் பதில் தாக்குதலை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போருக்கு உதவத் தயாராகஇருப்பதாக நார்த்தர்ன் படைகள் அறிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நடந்து வரும்உள் நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து தலிபன் அரசை பதவியிலிருந்துஅகற்றவும் இது நல்ல தருணம் என்று நார்த்தர்ன் அலையன்ஸ் கருதுவதாகக்கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற