உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக கூட்டணி நாளை இடப் பங்கீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியின் இடப் பங்கீடு குறித்த விவரங்களை நாளை (வியாழக்கிழமை)ஜெயலலிதா வெளியிட உள்ளார்.

இடப் பங்கீடு தொடர்பாக த.மா.காவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுடன் பேச்சு நடத்தின.

அமைச்சர் தம்பிதுரை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அதிமுகவின் தேர்தல் குழுவை த.மா.கா. தேர்தல்குழுவினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகவும், யார் யார் எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடுவதுஎன்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறிய தம்பிதுரை பேச்சுவார்த்தை விவரங்களை ஜெயலலிதாவிடம்தெரிவிப்போம். அவர் தான் இறுதி பங்கீட்டை அறிவிப்பார் என்றார்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், இடப் பங்கீடு அறிவிக்கப்பட்டவுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதொகுதிகள் தவிர வேறு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள இரு கட்சிகளின் வேட்பாளர்களும்அவற்றை வாபஸ் பெற்றுவிடுவார்கள். இதனால் பிரச்சனை ஏதும் வராது என்றார்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் குழுவினர் அதிமுக தேர்தல்குழுவை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.

நாளை இடப் பங்கீடு குறித்த விவரத்தை ஜெயலலிதா வெளியிட உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற