காஷ்மீர் தீவிரவாத அமைப்பின் வங்கி கணக்கு: பாக். முடக்கம்
இஸ்லமாபாத்:
காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஹர்கத்-உல்-முஜாஹுதீன்தீவிரவாத அமைப்பு மற்றும் அல் ரஷீத் டிரஸ்ட் ஆகியவற்றின் வங்கிக் கணக்கை முடக்கிவைக்குமாறு பாகிஸ்தானின் சென்ட்ரல் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஹர்கத்-உல்-முஜாஹுன் தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் செயல்பட்டுவரும் அமைப்பு.இந்த அமைப்பு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில்ஒன்று. இதேபோல் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது மற்றொரு இயக்கம் அல்ரஷீத் டிரஸ்ட்.
இவை இரண்டும் கராச்சியில் உள்ள ஹபீப் பாங்க் லிட் வங்கியில் கணக்குகள்வைத்துள்ளன. இந்த இரு அமைப்புகளின் கணக்குகளையும் முடக்கி வைக்கபாகிஸ்தானின் சென்ட்ரல் வங்கி உத்தரவிட்டுள்ளது என்று வங்கியின் செய்திதொடர்பாளர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தீவிரவாதத்தில் தொடர்புடையதாக 27 பேர் மற்றும் குழுக்களின் பெயர்களைஅமெரிக்க அதிபர் புஷ் அறிவித்திருந்தார். இவர்களின் வங்கி கணக்குகளையும்முடக்கி வைக்குமாறு அமெரிக்க அதிபர் புஷ் உத்தரவிட்டிருந்தார்.
ஹர்கத்-உல்-முஜாஹுதினுக்கும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கும்நெருங்கிய தொடர்புண்டு. இந்த அமைப்பு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகள்மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அல் ரஷீத் டிரஸ்ட் பல்வேறு நாடுகளில் சிறைகளில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவிசெய்து வந்தது.
அல் ரஷீத் டிரஸ்ட்டின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல்லா ஏ.எப்.பி செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், எங்கள் அனைத்து வங்கிகணக்குகளையும் மறு உத்தரவு வரும் வரை முடக்கி வைப்பதாக பாகிஸ்தான் சென்ட்ரல்வங்கி இன்று (புதன்கிழமை) அறிவித்தது என்று கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!