இந்தியாவைத் தாக்க காத்திருக்கும் 400 தீவிரவாதிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகிலும், சர்வதேச எல்லையிலும் 400 தீவிரவாதிகள்ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த காத்திருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா ஆப்கன் மீது போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் தீவிரவாதிகள் யாரும் எல்லை கடந்துஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுக்க ஜம்மு-காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில்கடந்த ஒரு வார காலமாக காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல் சர்வ தேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புபணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 400 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காத்திருக்கின்றனர்.இவர்கள் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து பல இடங்களிலும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகபாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம்பு காஷ்மீர்பகுதியில் உள்ள அனைத்து பயிற்சி முகாம்களையும் மூடிவிட்டது. இந்த முகாம்களில்தான் பாகிஸ்தான்தீவிரவாதிகளுக்கு பயற்சி அளித்துவந்தது..

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும், அயல் நாட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பயிற்சி அளித்துவந்தது.காஷ்மீரிலிருந்து வந்து பயிற்சி பெற்றவர்களையும், தொடர்ந்து பயிற்சி பெற்று வருபவர்களையும் ஜம்மு-காஷ்மீர்எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கும், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளது.

குறிப்பாக அவர்கள் குறி ஜம்முதான் தாக்குதலுக்காக 15 தீவிரவாத குழுக்கள் தயாராக உள்ளன.

இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு தயாராக உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ளநாகா-லோன்டி(காத்துவா பகுதி), முக்வால், சிம்பிலியால், ராம்கார், அர்னியா, செக்நெக், கேரி, அக்னூர் கிழக்கு(ஜம்மு பகுதி), லாம், நாவ்ஷெரா, சுந்தேர்பானி (ரஜோரி), பூஞ்ச் காலி, காலாகோட், சாப்ஜின், மெந்தார் (பூஞ்ச்)ஆகிய பகுதிகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்த அயல்நாட்டு தீவிரவாதிகள் அனைவரையும் பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திரும்புமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தலிபனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நார்தன் அலையனஸ் படையினரை எதிர்த்து தாக்குதல்நடத்த ஆப்கனுக்கு செல்லுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா ஆப்கன் மீது போர் தொடுத்தால் பதுங்கி இருக்கும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனைபாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற