அமெரிக்க அதிகாரிகள்- இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ரிச்சர்டுஆர்மிடேஜைச் சந்தித்து, தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்தவிருக்கும் போருக்கு ஆதரவு தெரிவித்தார்.

அமெரிக்காவில் கடந்தவாரம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காதயாராகி வருகிறது. இந்தத் தாக்குதலின் காரணகர்த்தாவாகக் கருதப்படும் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம்கொடுத்துள்ள ஆப்கான் மீது போர்தொடுக்க அமெரிக்கப் படை ஆயத்தமாகி வருகிறது.

இந்தப் போருக்கு பல நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்தியாவும் இந்தப் போருக்கு முழு ஆதரவுஅளிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில் மிஸ்ரா 2 நாள்பயணமாக வாஷிங்டன் சென்றுள்ளார்.

அங்கு அவர் அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்புஆலோசகர் கான்டலோசா ரைஸ், பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பில்ட், துணை அமைச்சர் பால்உல்போவிட்ஸ் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதி ராபர்ட் ஸோலிக் ஆகியோரைச் சந்தித்தார்.

இவர்களிடம் இந்தியாவின் ஆதரவை மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.

மிஸ்ராவிடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள், பின் லேடனுடன் தொடர்புடைய பல தீவிரவாத இயக்கங்களின்பட்டியலைப் காண்பித்தார்கள். அந்தப் பட்டியலில் இடம்பெறாமலும் பல தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாகவும்,அந்த அனைத்து இயக்கங்களுக்கும் எதிராக அமெரிக்க போராடும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஏனென்றால் பின்லேடனைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் தீவிரவாதம் நின்றுவிடாது. உலகின்அனைத்துப் பகுதியிலும் இயங்கிவரும் இயக்கங்களும் ஒடுக்கப்பட வேண்டும். அதற்கு அமெரிக்கா கடைசி வரைபோரடும் என்று அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் மிஸ்ரா, பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடாமல், இந்தியாவில் பல ஆண்டுகளாகநடத்தப்பட்டுவரும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தையும் எடுத்துக் கூறினார்.

மேலும் பின்லேடனின் அல்-காய்தா இயக்கத்திற்கும் பாகிஸ்தானிலோ, எகிப்திலோ உள்ள தீவிரவாதஇயக்கங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த அனைத்து இயக்கங்களும் ஒன்றுக்கொன்று ரகசியத்தொடர்புகள் வைத்துள்ளன என்றார் மிஸ்ரா. அதை அந்த அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற