போர் வியூகம் வகுப்பதில் அமெரிக்கா-பாக். குழப்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தீாவிரவாதத்திற்கு எதிரான போர் வியூகங்கள் வகுப்பதில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேகருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆப்கான் மீது தாக்குதல் தொடங்குதற்கு முன் போர் யுக்திகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்க ராணுவ அதிகாரிகள்குழு பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் விவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த விவாதத்தின் போது அமெரிக்கக் குழுவிற்கும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டுள்ளது.

ஆப்கானில் ஆளும் தலிபான்களின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முடிவுக்கு பாகிஸ்தான்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்கானில் தலிபான்களுக்கு எதிரான நார்தன் அல்லயன்ஸ் இயக்கத்தினருக்கு அமெரிக்கா ஆயுத உதவிஉள்ளிட்ட ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மதவாத அமைப்புகள் மற்றும் ஜிகாத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைஅமெரிக்கா கைவிடவேண்டும் என்று பாகிஸ்தான் கூறுகிறது.

மேலும் ஆப்கானில் போர்தொடுக்குமுன் ஐ.நா.சபையின் அனுமதியை மீண்டும் அமெரிக்கா பெறவேண்டும்என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால், அமெரிக்க அதிகாரிகள்கடுப்பாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து 2 நாடுகளுக்கிடையில் போர் வியூகங்களை வகுக்கும் கூட்டுமுயற்சியில் குழப்பம்ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற