ஆப்கானில் ஊடுருவிய கும்பல் தான் தலிபான்- அமெரிக்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தலிபான்கள் ஆப்கானியர்களே அல்ல என்றும், அவர்கள் அன்னியர்கள் என்றும் அமெரிக்கா வர்ணித்துள்ளது.

பெரும்பாலான தலிபான் தீவிரவாதிகள் வேறு நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் வந்தவர்கள். அங்குநிலவி வரும் அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி தங்களை ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர் என்றும்அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் அரி பிளெய்ஷர் கூறுகையில்,

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களே அல்ல. அங்கு வலுவான மத்திய அரசுஇல்லாமல் இருந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்தும் ஊடுருவி நாட்டைக்கைப்பற்றிய தீவிரவாதிகள் தான தலிபான்கள். அங்கிருந்து கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள்தீவிரவாதத்தைப் பரப்பி வருகிறார்கள்.

தலிபான்களின் ஆட்சியை அகற்றிவிட்டு அங்கு வேறு ஒருவரை ஆட்சியை ஏற்படுத்துவது அமெரிக்காவின்நோக்கமல்ல. மேலும் ஆப்கான் மக்கள் மீது அமெரிக்கா மிகுந்த மரியாதை வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற