அதிமுகவினர் போராட்டம் கண்டனத்திற்குரியது - வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் உருவபொம்மைகளை அதிமுகவினர் எரித்துவருவதற்கு மதிமுகதலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு தூண்டுதலாகஇருந்ததாக பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மற்றும் முன்னாள் தமிழக முதல்வர்கருணாநிதியை எதிர்த்தும் அதிமுகவினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்தப் போராட்டங்களின்போது அந்தத் தலைவர்களின் உருவபொம்மைகளும் எரிக்கப்படுகின்றன.

அதிமுகவினரின் இந்த செயல்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

பிரதமர் வாஜ்பாய் சட்டத்தையும், நீதியையும் மதிக்கும் ஒரு ஒப்பற்ற தலைவர். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளில்தலையிடாதவர்.

அவர்தான் ஜெயலலிதா பதவி ரத்தானதற்கு காரணமாக இருந்தவர் என்று அதிமுகவினர் கூறிவருவதுகண்டனத்திற்குரியது. மேலும் அவரது உருவபொம்மையை எரித்ததற்காக அதிமுகவினர் பகிரங்க மன்னிப்புக்கேட்கவேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற