ஜெயலலிதா மீதான வழக்குகள் வாபஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வத்தின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை)நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்துவிவாதிக்கப்பட்டது.

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று கடந்த 21ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரது பதவி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புதிய முதல்வராகபெரியகுளம் எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் முதல் முதலாக நேற்று(வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது. இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி 1 மணிநேரத்திற்கும் மேலாகநடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக பட்டியலிடப்பட்டிருந்தன.

ஆனாலும் அமைச்சரவை கூட்ட பொருளில் இடம் பெறாத விஷயம் ஒன்று குறித்துதான் பெரும்பாலும்விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றுஅமைச்சர் ஒருவர் வலியுறுத்தினார். இதையடுத்து இப்பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வராக இருந்த போது அவரும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஊழல்செய்ததாக கடந்த திமுக அரசு பல வழக்குகளைத் தொடர்ந்தது.

வருமானத்திற்கு அதிகமாகரூ 66.65 தோடி சொத்து சேர்த்த வழக்கு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்குமுறைகேடாக அனுமதி வழங்கப்பட்ட வழக்கு, கலர் டிவி ஊழல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு,டான்சி நில பேர ஊழல் வழக்கு ஆகிய வழக்குகள் ஜெயலலிதா மீது திமுக அரசால் தொடரப்பட்ட முக்கியவழக்குகளாகும்.

இவற்றில் கலர் டிவி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டார்.

நிலக்கரி இறக்குமதி வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுவிட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த அப்பீல்மனு காரணமாக ஜெயலலிதா சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது.

இதையடுத்து அடுத்த மாதம் 10ம் தேதி ஜெயலலிதா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதாவுக்குசிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிளசன்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்து தனி நீதிமன்றம்தீர்ப்பளித்தது. டான்சி வழக்கில் 3ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த அப்பீல் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 1ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா அப்பீல் மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, டான்சிவழக்குகள் தவிர மற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கூறியதையடுத்து இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

தனி நீதிமன்றங்களின் காலத்தை ஒரு ஆண்டு காலம் நீடித்து ஜெயலலிதா முன்பே உத்தரவு பிறப்பித்துவிட்டார். ஒருஆண்டு முடிந்த பின் இந்த நீதிமன்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால் மீண்டும் தனிநீதிமன்றங்களின் காலத்தை நீடித்து உத்தரவிட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் தனி நீதிமன்றங்களை கலைத்து விட்டால் அங்குள்ள அனைத்து வழக்குகளும் சாதாரணநீதிமன்றங்களுக்கு சென்றுவிடும். இதனால் வழக்கு விசாரணை முடிய மேலும் கால தாமதமாகும்.

எனவே பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, டான்சி வழக்கு தவிர மற்ற வழக்குகளை அரசு வாபஸ் பெற்றால்பிரச்சனை முடிந்துவிடும். இதுகுறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலகவட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் அதே சமயம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள இந்த சமயத்தில் வழக்குகளை வாபஸ் பெற்றால் எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்திற்கு இது வசதியாக போய்விடும் என்ற கருத்து பரவலாக அமைச்சர்களால் எடுத்துக்கூறப்பட்டது.

மேலும் வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறி அந்த அரசு ஆணை ஆளுநரின் ஒப்புதல் கையெழுத்துக்காகஅனுப்பி வைக்கப்படும்போது, அவர் கையெழுத்திட மறுத்தால் மேலும் சிக்கல் வரும் என்பதும் எடுத்துக்கூறப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையின் தீர்ப்பை பொறுத்து தனி நீதிமன்றங்களில் உள்ளவழக்குகளை வாபஸ் குறித்து முடிவெடுக்கலாம் என்று ஜெயலலிதா கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து எந்த முடிவும்எடுக்கப்படவில்லை.

உள்ளாட்சி தேர்தல் முடிந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் தீர்ப்பு வந்த பின் மீண்டும்அமைச்சரவை கூடி இது குறித்து விவாதிக்கு முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற