உள்ளாட்சித் தேர்தல் - விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திமுக கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின்தலைவர் திருமாவளவன் கூறினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஒருஇடத்தில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்தான் அந்த வெற்றி பெற்ற உறுப்பினர்.

ஆரம்பத்திலிருந்தே விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பிரச்சனை இருந்துவருகிறது.இந்நிலையில் பா.ம.க. திமுக கூட்டணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் திமுக கூட்டணியில்நீடிப்பதாக திருமாவளவன் அறிவித்தார்.

ஆனால் இன்று திடீரென்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திமுக கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப்போட்டியிடும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தனித்துப் போட்டியிட வேண்டும் என்றுஎங்கள் கட்சி நிர்வாகிகள் சேர்ந்து முடிவுசெய்துள்ளோம்.

ஆரம்பத்தில் திமுக கூட்டணியில்தான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும், எங்களைஆதரிக்கிற மக்களின் விருப்பத்தை ஏற்று தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இதனால் திமுக மீதோ, கலைஞர் மீதோ எங்களுக்கு எந்தவித மனக்கசப்போ, வருத்தமோ இல்லை. ஆனால், இந்தத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் எங்கள் கட்சியின் பலத்தை அறிய இது ஒரு வாய்ப்பாக இருக்கும்என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் 6 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 60 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். மற்ற இடங்களில் தலித்களை அரவணைத்துச் செல்லக்கூடியவேட்பாளர்களை எங்கள் அமைப்பு ஆதரிக்கும் என்று திருமாவளவன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற