விரைவில் தலிபான்-பாக். உறவு முறியும்: அமெரிக்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானின் ஆளும் அரசான தலிபானுடனான ராஜ்ய உறவுகளை விரைவில் பாகிஸ்தான் முறித்துக்கொள்ளும் என்று அமெரிக்க துணை செயலாளர் ரிச்சர் அர்மிடேஜ் கூறியுள்ளார்.

கடந்த 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கு ஆப்கானிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது.

அவரை ஒப்படைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசுமறுத்துவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது.

தலிபான் அரசை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமேஆதரித்து வந்தன.

ஆனால், கடந்த 22ம் தேதி தலிபானுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அறிவித்தது. தொடர்ந்து, கடந்த இரு நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவும் தலிபானுடனான உறவை முறித்துக்கொண்டது.

பாகிஸ்தான் மட்டுமே தலிபானுடனான உறவை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நாடும் விரைவில் தலிபான்உறவை முறித்துக் கொள்ளும் என்று அமெரிக்க துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிடேஜ் கூறியுள்ளார். அவர்மேலும் கூறியதாவது:

பாகிஸ்தான் தலிபானுடனான உறவை முறித்துக் கொண்டால் தலிபான் தனித்துவிடப்படும். பாகிஸ்தான் தொடர்ந்துதலிபானுடன் உறவு கொள்ள முடியாது.

அதிபர் புஷ் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் என்று கூறிவருவதையே பாகிஸ்தானும் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.

ஆப்கானிஸ்தானை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆப்கானிஸ்தானில் வாழும்மக்கள்தான்.

தலிபானிலேயே பல பிரிவுகள் உள்ளன. அவர்களே தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தற்போதுநாங்கள் எதுவும் முடிவு செய்ய முடியாது என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற