ஆப்கானில் மீண்டும் மன்னராட்சிக்கு எதிர் படை ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரோம்:

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை நீக்கிவிட்டு மீண்டும் முன்னாள் மன்னர் முகமதுஜாகிர் ஷா தலைமையில் ஆட்சி அமைக்க நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

அவரை மீண்டும் மன்னராக்கும் முயற்சியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்ஈடுபட்டுள்ளன. அவருக்கு ரோம் நாடு தான் அடைக்கலம் கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சியை பிடித்து 5 ஆண்டுகள் ஆகியுள்ளன.தற்போது அங்கு ஆளும் தலிபான்களுக்கும், அவர்களை எதிர்க்கும் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினருக்கும் இடையே தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்துவருகிறது.

இந்த மாத துவக்கத்தில் இருந்து போர் மிக கடுமையாகி உள்ளது. தலிபானிடமிருந்துபல முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்கூறிவருகின்றனர்.

இந்நிலையின் நார்த்தர்ன் அலையன்ஸ் ரோம் நகரில் கூட்டம் ஒன்றை கூட்டியது. அந்தகூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னரான முகமது ஷாகிர் ஷாவிடம்மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பதற்கான முயற்சியில்ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து நார்த்தர்ன் அலையன்சின் செய்தித் தொடர்பாளர் ஜலாமி ரசூல்நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று கூடிய நார்த்தர்ன் அலையன்ஸ் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆளும்தலிபான் அரசை அகற்றி விட்டு ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னரான முகமதுஜாகிர் ஷாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சியை ஆதரிப்பது எனமுடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னர் ஆதரவுடன் மதத் தலைவர்கள் குழு ஒன்றையும், ராணுவ குழு ஒன்றையும்அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுக்கள் மன்னருக்குவழிகாட்டி அரசு நடத்தும்.

இந்த குழுக்களில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்து விரைவில் முடிவுசெய்யப்படும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற