திமுக வேட்பாளர் பட்டியலில் தாமரைக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குதாமரைக்கனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதிநேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.

அதில் 57 நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆலந்தூர் நகராட்சிக்கு பாரதி, திண்டுக்கல் நகராட்சிக்கு பஷீர் அகமது, ராமநாதபுரம் நகராட்சிக்குபவானி ராஜேந்திரன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தாமரைக்கனி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேயர் பதவி வேட்பாளர்களாக சென்னைக்கு ஸ்டாலின், மதுரைக்கு செ.ராமச்சந்திரன், திருச்சிக்கு நிர்மலா,திருநெல்வேலிக்கு உமா மகேஸ்வரி ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற