31 இந்திய கைதிகளை நாளை விடுவிக்கிறது பாக்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லமாபாத்:

பாகிஸ்தானுக்குள் அத்து மீறி நுழைந்ததறக்காக கைது செய்யப்பட்டுள்ள 31 இந்தியர்கள் நாளை விடுதலைசெய்யப்படவுள்ளனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில், 31 இந்தியர்கள் பாகிஸ்தானுக்குள் அத்து மீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு,பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தற்போது விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த ஆண்டு ஜுலை மாதம் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்திய பிரதமருடன் பேச்சு வார்த்தைநடத்தியபோது, இந்த 31 பேரையும் விடுதலை செய்வதாக கூறியிருந்தார்.

ஆனாலும் தவிர்க்க முடியாத சில பாதுகாப்பு காரணங்களால் அவர்களை விடுதலை செய்வது தாமதமானது.

கைது செய்யப்பட்டுள்ள 31 இந்தியர்களும் நாளை (திங்கள்கிழமை) வாகா எல்லையருகே இந்தியஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற