நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளை (திங்கள்கிழமை, அக்டோபர் 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

ரயிலில் பயணண் செய்யும் பயணிகளின் சேஃப்டி சர்சார்ஜ் கட்டணம் மத்திய ரயில்வே அமைச்சரால்உ.யர்த்தப்பட்டு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வு பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், ராஜதானி, சதாப்தி ரயில்களிலும், புறநகர் ரயில் பயணகட்டணங்களுக்கும் பொருந்தும்.

முன்பதிவு செய்த பயணிகள் புதிய கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். அல்லது பயணத்தின் போது கூடுதல்கட்டணத்தை டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும்.

பயணம் செய்வதற்கு முன்பு அருகில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்டரிலும் செலுத்தலாம் என்று தென்னகரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரவிருக்கும் ரயில் கட்டண உ.யர்வு விவரம்:

2ம் வகுப்பு (பாசஞ்ஜர் ரயில்) 500 கிலோமீட்டருக்குள் ரூ 1.00

500 கிலோ மீட்டருக்கு மேல் ரூ 1.00

2ம் வகுப்பு (எக்ஸ்பிரஸ் ரயில்) 500 கிலோமீட்டருக்குள் ரூ 2.00

500 கிலோ மீட்டருக்கு மேல் ரூ 2.00

படுக்கை வசதி 500 கிலோமீட்டருக்குள் ரூ 10.00

500 கிவோமீட்டருக்கு மேல் ரூ 20.00

ஏ.சி. சேர் கார் 500 கிலோ மீட்டருக்குள் ரூ 20.00

500 கிலோ மீட்டருக்கு மேல் ரூ 40.00

முதல் வகுப்பு 500 கிலோமீட்டருக்குள் ரூ 20.00

500 கிலோ மிட்டருக்கு மேல் ரூ 40.00

ஏ.சி. மூன்றடுக்கு (த்ரீ டயர்) படுக்கை வசதி 500 கிலோமீட்டருக்குள் ரூ 30.00

500 கிலோ மிட்டருக்கு மேல் ரூ 60.00

ஏ.சி. முதல் வகுப்பு 500 கிலோ மிட்டருக்குள் ரூ 50.00

500 கிலோ மீட்டருக்கு மேல் ரூ 100.00

மாதாந்திர சீசன் டிக்கெட்

முதல் வகுப்பு ரூ 20.00

இரண்டாம் வகுப்பு ரூ 10.00

காலாண்டு சீசன் டிக்கெட்

முதல் வகுப்பு ரூ 60.00

இரண்டாம் வகுப்பு ரூ 30.00

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற