கோவையில் 2 தலை, 4 கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 2 தலையுடன் அதிசய குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் காங்கயத்தில் காமராஜர் தெருவில் வசித்து வரும் ஜோதீசுவரன்-சுப்புலட்சுமி தம்பதிகளுக்குஇந்த அதிசய குழந்தை பிறந்தது.

ஜோதீசுவரன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். கர்ப்பிணியான சுப்புலட்சுமியை, பிரசவ காலம் வந்தவுடன்கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ஜோதீசுவரன்.

அங்கு சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு அதிசயமாக 2 தலைகளும், 4கைகளும், 2 கால்களும் இருந்தன.

அந்த குழந்தையின் எடை 4 கிலோ இருந்தது. ஆனாலும் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த அதிசய பெண்குழந்தை இறந்து விட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற