சிவகங்கை அருகே தேர்தல் இல்லாமலே தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவகோட்டை:

சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் எதுவும் நடைபெறாமலேயே பஞ்சாயத்துத் தலைவரும்உறுப்பினர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த சக்கந்தி கிராமத்தில்தான் இச்சம்பவம்நடந்துள்ளது.

இந்தக் கிராம பஞ்சாயத்திலிருந்து எந்தவித வேறுபாடும் இல்லாமல் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத்தேர்ந்தெடுக்க, மக்களும் அந்தக் கிராம முக்கியஸ்தர்களும் முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளர் தேர்வு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பம் (40) என்ற பெண் பஞ்சாயத்து தலைவராக ஏக மனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் பஞ்சாயத்துக்கு துணைத் தலைவரும் உறுப்பினர்களும் கூட ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இங்கு தேர்தல் நடைபெறாது.

முன் மாதிரியாகத் திகழும் இந்த கிராமத்து மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற