ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது: தீவிரவாதிகள் செயலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

இஸ்ரேல் தலைநகரான டெல்அவிவ் நகரிலிருந்து சைபீரியாவுக்கு சென்றுகொண்டிருந்த ரஷ்ய பயணிகள் ஜெட் விமானம் கருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது வெடித்து சிதறியது.

இந்த விமானம் இன்று (வியாழக்கிழமை) 66 பயணிகளுடன் சைபீரியாவில் உள்ளநோரோசிஸ்க் என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த விமானம் கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென வெடித்துசிதறியது. இதை அந்த விமானத்தின் அருகே பறந்து கொண்டிருந்த இன்னொருவிமானத்தின் விமானி நேரில் பார்த்துள்ளார்.

விமானம் குண்டு வெடித்து சிதறியிருக்கக்கூடும் எனவும் இது தீவிரவாதிகளின்செயலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது என்று இன்டர் ஃபேக்ஸ் செய்திநிறுவம் தெரிவித்துள்ளது.

செசன்யாவில் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து பின்லேடனின் தீவிரவாதிகள் போரிட்டுவருகின்றனர். இப்போது ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்குஅனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.

இந் நிலையில் பின்லேடன் கும்பல் தான் இந்த விமானத்தை தகர்த்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது.

இந்த ஜெட் விமானம் டுப்பலோவ் ரகத்தைச் சேர்ந்தது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற