அதிமுகவில் கோஷ்டி பூசல்... நெல்லையில் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு அடி, உதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடந்த அதிமுக கோஷ்டிப் பூசல் மோதலில்பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ. அண்ணாமலை ஆகியோர் தாக்கப்பட்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ளது மேலநீலித நல்லூர். இங்கு தேர்தல் பணி தொடர்பாக அதிமுகவினருடன்பேசுவதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், தென்காசி அதிமுக எம்.எல்.ஏ.அண்ணாமலையும் சென்றிருந்தனர்.

அப்போது வார்டு வேட்பாளர் தொடர்பாக அமைச்சர் குழுவினருக்கும், ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அமைச்சர் மீது சிலர்தாக்குதல் நடத்தினர். அவரது சட்டையைக் கிழித்து எறிந்தனர்.

வேட்டியையும் பறிக்க முயன்றபோது அமைச்சர் அங்கிருந்து தப்பி காருக்குள் ஏறிக் கொண்டார். அவரைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. அண்ணாமலையும் காருக்குள் ஏற எத்தனித்தார்.

ஆனால் விடாத தொண்டர்கள், தொடர்ந்து வந்து அண்ணாமலையை காருக்குள்ளிருந்து வெளியே இழுத்துஅடித்து, உதைத்தனர். அவரது வேட்டி, சட்டையையும் கழற்றி எரிந்தனர்.

இந்த நிலையில் அமைச்சரின் கார் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தது. ஆனால் ஆத்திரத்தில் இருந்த தொண்டர்கள்காரைப் புறப்பட விடாமல் தடுத்தனர். மீறி கார் கிளம்பவே சாலையில் கிடந்த கற்களை எடுத்து காரின் மீது வீசிதாக்கினர்.

நிலைமை மோசமாகவே போலீஸார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். பின்னர் தடியடி நடத்தி தொண்டர்களைக்கலைத்தனர். அதன் பிறகே அமைச்சரின் கார் கிளம்பிச் சென்றது. அதிமுகவினரின் இந்த களேபரத்தால் அந்தப்பகுதியே பதட்டத்திற்குள்ளானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற