உள்ளாட்சித் தேர்தல்: மாமியார் திண் மருமகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

மாமியாரும் மருமகளும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரே தொகுதியில் எதிர்எதிர் அணியில் போட்டியிடுகிறார்கள்.

மாமியார் மருமகள் சண்டை இதுவரை வீட்டோடு இருந்துவந்தது. தற்போது வீதிக்கே வந்துவிட்டது. இதுபற்றியவிவரம் வருமாறு:

கடந்த முறை நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் நின்று கும்பகோணம் நகராட்சியில் உள்ள 33- வது வார்டுக்குகவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.எம். உமா.

இவர் இந்தத் தேர்தலிலும் அதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்துப் போட்டியிடுபவர், வேறு யாருமல்ல. இவருடன் ஒரே வீட்டில் குடியிருக்கும் இவரது மாமியார்குப்பம்மாள்.

இவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் அந்தப் பகுதி திமுக பிரமுகர் டி.எல்.ஆர்.கோபால் என்பவரின்மனைவி. இந்தத் தொகுதியில் இந்த 2 பேருக்கிடையில் தான் போட்டி. வேறு யாரும் போட்டியிடவில்லை.

இருவரும் காலையில் ஆளுக்கொரு திசையில் தங்கள் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்க கிளம்பிவிடுகிறார்கள்.இவர்களுக்கு பக்கபலமாக இருப்பது இவர்களின் கணவர்கள். இதனால் ஒரே வீட்டில் இரண்டு பரம எதிர்கட்சிகளின் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன.

இவர்களிடம் யாராவது விட்டுக்கொடுக்கலாமே என்று கேட்டதற்கு, தேர்தல் என்று வந்துவிட்டால் மாமியாராவதுமருமகளாவது என்கிறார்கள் இருவருமே.

தேர்தல் சண்டையில் ஜெயிக்கப் போவது மாமியாரா, மருமகளா என்று என்று வரும் 21ம் தேதி தெரியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற