லண்டன் ஓட்டல் வழக்கு- இன்று ஜெ. கோர்ட்டில் ஆஜராவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டன் ஓட்டல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தினகரன் எம்பியும் இன்றுகோர்ட்டில் ஆஜராவார்களா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கியதன் மூலம் ரூ.45 கோடி வரைசொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா மற்றும் தினகரன் எம்.பி. ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் விசாரணநடந்தது வருகிறது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக்கொள்ள ஜெயலலிதாவும், தினகரனும் கோர்ட்டில் நேரில்ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்ட்டது.

ஆனால் இந்த சம்மனைத் திரும்பப்பெறுமாறு, தினகரன் கடந்த செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்தார். ஆனால்வழக்கு வியாழக்கிழமை விசாரணக்ைகு வருவதால் அந்த மனுவை நீதிபதி அசோக்குமார் தள்ளுபடி செய்தார்.

இநந்நிலையில் ஜெயலலிதாவும், தினகரனும் கோர்ட்டில் இன்று ஆஜராவது சந்தேகமே என்று நீதிமன்றவட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற