சரிவிலிருந்து திமுகவை மீட்கமுடியாது: வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

திமுக சந்தித்துவரும் தொடர் சரிவிலிருந்து அதை மீட்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது வைகோ கூறுகையில்,வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் மதிமுக போட்டியிடுகிறது.

பணபலம் இல்லாமல் மக்கள் பலத்தையும், தொண்டர் பலத்தையும் நம்பி தேர்தலைசந்திக்கிறது மதிமுக. மதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியில்ஈடுபட்டுள்ளனர். எனவே, உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள்அதிகமாக உள்ளது.

திமுக, அதிமுக கூட்டணியில் பிரிந்து சில கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் 3வதுஅணி அமைத்துள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின்அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

திமுக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. திமுகவை தொடர் சரிவிலிருந்து மீட்கமுடியாது. அதிமுக ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில்நிற்கிறது.

திராவிட கொள்கைகளை திமுகவும்,அதிமுகவும் பின்பற்றவில்லை. இந்த கட்சிகளின்சரிவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பை மக்கள் மதிகமுகவுக்குஅளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும்மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.நேரமின்மை காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற