இலங்கை சண்டையில் 25 புலிகள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை கடற்படையினருக்கும் விடுதலை புலியினருக்கும் இடையே நடைபெற்றசண்டையில் 25 விடுதலை புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை கடற்படைஅதிகாரிகள் கூறியுள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடகிழக்கு பகுதியில் கடந்த 2 வாரங்களாககடற்புலிகள் இலங்கை கடற்படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன் 1,200 இலங்கை பாதுகாப்பு படையினரை ஏற்றிச் சென்றகப்பல் மீது விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த முயன்றனர்.ஆனால் அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை.

சென்ற வாரம் இலங்கை படையினருக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேநடைபெற்ற சண்டையில் 30 விடுதலை புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கைபடையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை கடற் படையினருக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 25 விடுதலை புலிகள்கொல்லப்பட்டனர் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனாலும் இதை விடுதலை புலிகள் மறுத்துள்ளனர்.

இது குறித்து இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

முல்லைத்தீவு அருகே விடுதலை புலிகளின் கடற் புலிகள் படகுக்களில் சென்றுகொண்டிருந்தனர். இந்த படகுகளை அந்த பகுதியில் இலங்கை கடற்பகுதியினர்பார்த்தனர் உடனே அவர்கள் புலிகளின் படகுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

புலிகளும் பதிலுக்கு சுட்டனர். இதையடுத்து இலங்கை கடற்படையினருக்கும்,இடையே கடும் சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டையில் 25 புலிகள் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகளுக்கு சொந்தமான2 படகுகள் நீரில் மூழ்கின. 2 படகுகள் சேதமடைந்தன. ஒரு போர் படகுசேதமடைந்தது என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் விடுதலை புலிகள் இதை மறுத்துள்ளனர்.

விடுதலை புலிகள் நடத்தி வரும் இணைய தளத்தில் , விடுதலை புலிகளுக்கும்இலங்கை கடற்பயிைனருக்கும் இடையே நடந்த சண்டயிைல் விடுதலை புலிகள்தரப்பில் யாரும் இறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்கு சொந்தமான வாய்ஸ் ஆஃப் டைகர்ஸ் வானொலி செய்தியில்,விடுதலை புலிகளுக்கு சொந்தமான போர் படகு இலங்கை கடற்படையின் ரோந்துபிரிவினரால் வழி மறிக்கப்பட்டது.

இதையடுத்து புலிகளுக்கும்,இலங்கை கடற்படையினருக்கும் இடையே 3 மணி நேரம்சண்டை நடந்தது இதில் விடுதலை புலிகள் தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லைஎன்று கூறியது.

வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் இலங்கை கடற்படை தரப்பில் ஏற்பட்ட சேதம்குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற